நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க, இதோ
வைரல் போட்டோ
ரசிகர்கள் பலரும் பார்த்திராத திரையுலக பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் திரையுலக பிரபலம் ஒருவர் தனது சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் இந்த சிறுமி யார் என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அனுராதா ஸ்ரீராம்
அவர் வேறு யாருமில்லை பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் தான். தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான பின்னணி பாடகியாக இருக்கும் அனுராதா ஸ்ரீராம் தனது சிறு வயதில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.
அனுராதா ஸ்ரீராம் கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு, நிலவை கொண்டு வா, மல்லிகையே மல்லிகையே என பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ளார். இவர் தமிழ், கன்னடம், பெங்காலி, தெலுங்கு போன்ற பல்வேறு மொழிகளில் 4000க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.