போயஸ் கார்டனில் உள்ள நயன்தாரா-விக்னேஷ் சிவன் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படம் உள்ளே
நயன்தாரா-விக்னேஷ் சிவன்
பிரபலங்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் ரசிகர்கள் எதிர்ப்பார்க்காத ஒரு காதல் ஜோடியாக இணைந்தவர்கள். நானும் ரவுடித்தான் படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட கோலாகலமாக திருமணமும் செய்துகொண்டார்கள்.
திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே தங்களுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை அறிமுகம் செய்தார்கள், Surrogacy மூலம் இருவரும் குழந்தை பெற்றார்கள்.
அண்மையில் ஓணம் பண்டிகையை தங்களது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடினார்கள்.
சமீபத்தில் திருப்பதிக்கு சென்றார்கள், அங்கே எடுக்கப்பட்ட வீடியோக்கள் வெளியாகி இருந்தது.
போயஸ் கார்டன்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கலைஞர், ரஜினிகாந்த், தனுஷ் என பல பிரபலங்கள் இருக்கும் போயஸ் கார்டனில் நடிகை நயன்தாராவும் அண்மையில் வீடு வாங்கியிருந்தார், இன்னும் அங்கே குடிபோகவில்லை.
4 மாடி கொண்ட அந்த வீட்டின் கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது, தற்போது அந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.