ஜெயிலருக்கு போட்டியாக ப்ரீ புக்கிங்கில் மாஸ் செய்யும் ஷாருக்கானின் ஜவான்- இத்தனை கோடி வசூலித்ததா?
ஷாருக்கானின் ஜவான்
தமிழ் சினிமா கலைஞர்கள் பலரும் பாலிவுட் பக்கம் போக வேண்டும் என்று ஆசைப்படுவார்கள், ஆனால் பாலிவுட்டிலேயே ராஜ்ஜியம் செய்துகொண்டிருக்கும் நடிகர் ஷாருக்கான் இப்போது தமிழ் பக்கம் வந்துள்ளார்.
சில படங்களே இயக்கி டாப் பிரபலமாக வலம்வரும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி என பலர் நடிக்க அனிருத் இசையில் ஜவான் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.
வரும் செப்டம்பர் 7ம் தேதி அதாவது நாளை இப்படம் உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாக இருக்கிறது.
இப்படம் தமிழ், ஹிந்தி என இரு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது, ஆடியோ வெளியீட்டு விழாவும் படு மாஸாக நடந்தது.
ப்ரீ புக்கிங்
படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ புக்கிங் சூப்பராக நடக்கிறது. உலகம் முழுவதும் ப்ரீ புக்கிங்கால் படம் ரூ. 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாம், தமிழகத்தில் கூட நல்ல புக்கிங் என கூறப்படுகிறது.