குட் பேட் அக்லி படம் எப்படி இருக்கு தெரியுமா? வெளிவந்த முதல் விமர்சனம்
குட் பேட் அக்லி
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி திரைப்படம், ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இதுவரை இப்படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்களும் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.
அதுவும் இரண்டாவதாக வெளிவந்த பாடல் வெறித்தனமாக இருந்தது. கண்டிப்பாக ஏப்ரல் 10ம் தேதி அஜித் ரசிகர்களுக்கு செம விருந்து திரையரங்கில் காத்திருக்கிறது.
முதல் விமர்சனம்
இந்த நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டிற்காக அனுப்பவேண்டிய Print சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட நிலையில், படத்தை பார்த்த சென்சார் குழுவினர் படம் சிறப்பாக வந்துள்ளது என கூறி படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
பொதுவாக சென்சாரில் உள்ளவர்கள் சில நல்ல திரைப்படங்களுக்கு மட்டும் தான் இப்படி தங்களது பாராட்டுகளை தெரிவிப்பார்கள். அந்த வகையில் குட் பேட் அக்லி படத்தை பார்த்துவிட்டு சென்சார் குழுவினர் பாராட்டியுள்ளது, படத்திற்கு பாசிட்டிவாக அமைந்துள்ளது.
கண்டிப்பாக ஏப்ரல் 10ம் தேதி அஜித் ரசிகர்கள் அனைவரின் எதிர்பார்ப்பையும் இப்படம் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் கழன்று விழுந்த சக்கரம்: பரபரப்பை உருவாக்கிய சம்பவம் News Lankasri
