கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?

By Dhiviyarajan Jun 07, 2024 08:39 AM GMT
Report

கங்கனா ரனாவத்

பாலிவுட் நடிகையான கங்கனா ரனாவத், தற்போது அரசியலில் முழு ஈடுபாடு காட்டி வருகிறார் சமீபத்தில் நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் வேட்பாளராக மந்தி தொகுதியில் களமிறங்கி 74755 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் கண்டார்.

நேற்று கங்கனா, சண்டிகர் விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அப்போது குல்விந்தர் கவுர் என்ற (CISF) பெண் காவலர் ஒருவர் கங்கனாவின் கன்னத்தில் அறைந்தார். உடனே, இது பற்றி கங்கனா ரனாவத் வீடியோ வெளியிட்டு குற்றம் சாட்டியிருந்தார்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடிய விவசாயிகளை காலிஸ்தான் தீவிரவாதிகள் என கங்கனா ரனாவத் கூறியிருந்தார். அதனால் தான் அவரை அறைந்தேன் என்று விசாரணையில் குல்விந்தர் கவுர் தெரிவித்துள்ளார்.

கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு பாராட்டு தெரிவித்த சேரன்!! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா? | Cheran Tweet About Kangana Ranaut Get Slapped

Hats off..

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பிரபல இயக்குனர் சேரன், "இந்த பெண்மணியின் கோபத்தில் நியாயம் இருப்பதாக பார்க்கிறேன்.. அந்த அடி நடிகைக்காகனதல்ல. வாக்களித்த மக்களுக்கானது.. விவசாயிகளின் உணர்வு தெரியாமல் பேசிய அந்த வார்த்தைகளுக்கு பின்னும் இந்த கவர்ச்சிக்கு ஓட்டு விழுகிறது என்றால்.. மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off.." என்று பதிவிட்டுள்ளார்.   

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US