இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரியுமா.. நடிகர் விஜய்யின் நெருங்கிய நண்பராம்
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நட்சத்திரங்களின் புகைப்படங்கள் வெளிவந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
அவ்வாறு தற்போது ஒரு நட்சத்திரத்தின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பாப்புலராக வலம் வந்து கொண்டிருக்கிறது.
அவர் வேறு யாருமில்லை 90 - ஸ் காலகட்டத்தில் அதிக பெண் ரசிகர்களை கொண்டு சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் பிரசாந் தான். இயக்குனர் மற்றும் நடிகர் தியாகராஜனின் மகனான இவர் தமிழில் 'வைகாசி பொறந்தாச்சு' என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் பிரசாந்
அதன் பின், பல முன்னணி நடிகைகளுடன் வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார். ஆனால், சினிமாவில் இவர் மார்க்கெட் ஒரு கட்டத்திற்கு பிறகு முற்றிலும் சரிந்து விட்டது.
பின் 'அந்தகன்' படத்தின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுத்தார். சமீபத்தில், வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த GOAT படத்தில் விஜய்யின் நெருங்கிய நண்பராக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். அவரின் சிறு வயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
