சின்மயியும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றாரா? சர்ச்சைக்கு விளக்கம்
வாடகை தாய்
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் வாடகை தாய் மூலமாக இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சை ஆகி இருக்கிறது. திருமணமாகி 5 வருடங்களுக்கு குழந்தை இல்லை என்றால் தான் இந்த முறையில் குழந்தை பெற முடியும் என சட்டம் இருக்கும் நிலையில் அதை அவர்கள் மீறிவிட்டனர் என சர்ச்சை எழுந்தது. அது பற்றி அரசு அமைத்த குழு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் பாடகி சின்மயியும் வாடகைத்தாய் முறையில் தான் குழந்தை பெற்றாரா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சின்மயி விளக்கம்
சில மாதங்களுக்கு முன் சின்மயிக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தது. அவர்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் போட்டோவை சின்மயி பதிவிட்டு இருந்தார்.
வாடகைத்தாய் மூலம் பெற்றீர்களா என பலரும் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சின்மயி தான் கர்ப்பமாக இருந்த போட்டோக்களை வெளியிட்டு இருக்கிறார்.
முதல்முறையாக தனது மகனின் முகத்தை காட்டிய நடிகை காஜல் அகர்வால்! கியூட்டான புகைப்படம்

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
