உலகளவில் சாதனை படைத்த சின்மயி-ன் முத்த மழை பாடல்.. என்ன தெரியுமா?
தக் லைஃப்
மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் ‘தக் லைஃப்’. கமல், சிம்பு, அபிராமி உள்ளிட்ட ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இதில், கமல்ஹாசன் த்ரிஷா உடன் ரொமான்ஸ் செய்த காட்சிகள் மிகவும் சர்ச்சைக்கு உள்ளானது. இதனால் படம் எதிர்பார்த்த வரவேற்பு பெறாமல் வசூலில் தோல்வி அடைந்தது.
படத்தின் பெரிய ஹைலைட்டாக மாறியது முத்த மழை பாடல். தமிழில் தீ பாடியதைவிட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி பாடியது மிகப்பெரிய ட்ரெண்டானது.

என்ன தெரியுமா?
இந்நிலையில், தற்போது சின்மயி வெர்ஷன் உலகளவில் ட்ரெண்ட் ஆகி உள்ளது.
அதாவது, யூ டியூபில் சின்மயி பாடிய பாடல் டாப் 100 - ல் உலகளவில் 10 - வது இடத்தில் இடம் பெற்றுள்ளது. இந்தியாவில் 8 - வது இடத்தை பிடித்துள்ளது. இதனால், சின்மயின் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பிரித்தானிய இராணுவ உதவியுடன் ரஷ்யா கொடியுடன் சென்ற எண்ணெய் கப்பலை கைப்பற்றிய அமெரிக்கா News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri