காமராஜர் அருகில் இருக்கும் அந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?..உள்ளே பாருங்க
சிறுவயது புகைப்படங்கள்
சினிமா பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்களால் இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில் ஒரு நடிகர் சிறுவயதில், கர்மவீரர் காமராஜர் உடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிங் மேக்கர் காமராஜர் உடன் இருக்கும் அந்த பிரபலம் யார் என்று பார்க்கலாம் வாங்க..
யார் தெரியுமா?
இந்த புகைப்படத்தில் இருக்கும் பிரபலம் வேற யாரும் இல்லை பிரபல நடிகர் சின்னி ஜெயந்த் தான். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், காமெடி நடிகர், மிமிக்ரி கலைஞர் எனப் பல பன்முகங்களை கொண்டவர்.
சின்னி ஜெயந்த் நடிப்பை தாண்டி மிமிக்ரி செய்வதன் மூலம் அதிகம் பிரபலமானார் என்றே கூறலாம்.
இந்நிலையில் சின்னி ஜெயந்த் சிறுவயதில் காமராஜர் உடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து , "7 வயதில் அய்யா காமராஜர் முன்பு பாடினேன். நீ நல்ல கலைஞனாய் வருவாய் என்றுஆசிர்வதித்தார். வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்" என்று சின்னி ஜெயந்த் குறிப்பிட்டு இருக்கிறார்.