நடிகர் சிரஞ்சீவிக்கு கேன்சர் நோயா? பரவிய செய்தி பற்றி நடிகர் விளக்கம்
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. அவரது குடும்பத்தில் இருந்து அதிகம் பேர் நடிகர்கர்களாக தெலுங்கு சினிமாவில் இருக்கின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் சிரஞ்சீவிக்கு கேன்சர் வந்தது என்றும், அதற்காக சிகிச்சை பெற்று தான் குணமடைந்தார் என்றும் ஒரு செய்தி பரவியது.
விளக்கம்
இந்த செய்தி வைரல் ஆன நிலையில் பலரும் சிரஞ்சீவிக்கு போன் செய்து நலம் விசாரிக்கிறார்களாம். அதனால் தற்போது விளக்கம் கொடுத்திருக்கிறார்.
"நான் ஒரு கேன்சர் சென்டர் திறப்பு விழாவில் பங்கேற்று பேசும்போது, 'ரெகுலராக மெடிக்கல் டெஸ்ட் எடுத்துக்கொண்டால் கேன்சரை தவிர்க்கலாம்' என்று பேசினேன். 'நான் colon scope test செய்துகொண்டதால் எனக்கு non-cancerous polyps இருந்தது உறுதியானது. அதை நீக்கிவிட்டார்கள். '
"நான் டெஸ்ட் செய்யவில்லை என்றால்.. அது கேன்சராக மாறி இருக்கும். அதனால் எல்லோரும் முன்னெச்சரிக்கை உடன் இருங்கள் என கூறினேன். ஆனால் அதை சிலர் தவறாக புரிந்துகொண்டு எனக்கு கேன்சர் என செய்தி பரப்பி இருக்கிறார்கள்" என விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
కొద్ది సేపటి క్రితం నేనొక క్యాన్సర్ సెంటర్ ని ప్రారంభించిన సందర్భంగా క్యాన్సర్ పట్ల అవగాహన పెరగాల్సిన అవసరం గురించి మాట్లాడాను. రెగ్యులర్ గా మెడికల్ టెస్టులు చేయించుకుంటే క్యాన్సర్ రాకుండా నివారించవచ్చు అని చెప్పాను. నేను అలర్ట్ గా వుండి కొలోన్ స్కోప్ టెస్ట్…
— Chiranjeevi Konidela (@KChiruTweets) June 3, 2023
மீண்டும் பண பிரச்சனையில் மாட்டிய கண்ணன்! வீட்டை விட்டு துரத்தும் மூர்த்தி