வயநாடு நிலச்சரிவு நிவாரணத்துக்கு கோடியில் வழங்கிய நடிகர் சிரஞ்சீவி.. எவ்ளோ தெரியும்!!
நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இது வரைக்கும் 350க்கும் மேற்பட்டோர் உயிழந்தனர். தற்போதைய நிலவரப்படி, 215 பேரின் சடலங்கள், 143 உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளது.
நிதி
இந்நிலையில் பிரபல சிரஞ்சீவி தனது எக்ஸ் தலத்தில், "கேரளாவில் கடந்த சில நாட்களாக இயற்கை சீற்றம் காரணமாக நூற்றுக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களின் இழப்புகளால் ஆழ்ந்த துயரத்தை ஆழ்த்தியுள்ளது. நானும் சரணும் இணைந்து 1 கோடி ரூபாய் நிவாரண நிதி கேரளா அரசுக்கு கொடுக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
Deeply distressed by the devastation and loss of hundreds of precious lives in Kerala due to nature’s fury in the last few days.
— Chiranjeevi Konidela (@KChiruTweets) August 4, 2024
My heart goes out to the victims of the Wayanad tragedy. Charan and I together are contributing Rs 1 Crore to the Kerala CM Relief Fund as a token of…