இந்த வருடத்தில் அதிகம் வசூலித்த படம் வலிமையா? பீஸ்ட்டா?- சினிமா பிரபலம் ஓபன் டாக்
கடந்த பிப்ரவரி 24ம் தேதி பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையில் படு மாஸாக வெளியான திரைப்படம் வலிமை.
போனி கபூர் தயாரிக்க வினோத் இயக்க அஜித் நடிப்பில் வெளியான இப்படம் உலகம் முழுவதும் மொத்தமாக ரூ. 234 கோடி வரை வசூலித்திருந்தது. இதுதான் வலிமை படத்தின் மொத்த வசூல் விவரம்.
விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகி இருந்தது. படத்தின் கதை கொஞ்சம் சொதப்பவே விஜய் என்ற பெயருக்காகவே படம் இத்தனை நாட்கள் ஓடின.
வசூலும் நாளுக்கு நாள் குறைந்த வண்ணம் உள்ளது. இதுவரை படம் ரூ. 190 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.

சித்ரா லட்சுமனன் ஓபன் டாக்
சினிமா பிரபலம் சித்ரா லட்சுமனன் படங்கள் குறித்து பேசி வீடியோ வெளியிடுவது வழக்கம். அவரிடம் ஒரு பேட்டியில் இந்த வருடம் அதிகம் வசூலித்தது விஜய்யின் பீஸ்ட்டா அல்லது அஜித்தின் வலிமையா என கேட்கப்பட்டுள்ளது.
அதற்கு அவர் கொஞ்சமும் தயங்காமல் அஜித்தின் வலிமை தான் என கூறியுள்ளார்.
2022ல் தமிழகத்தில் இதுவரை அதிகம் வசூலித்த படங்கள்- டாப் 5 படங்களின் விவரம்
இன்று இரவு., கார்க் தீவு, எண்ணெய் வளங்களை கைப்பற்றுவோம்- ஈரானுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை News Lankasri
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan