நடிகர் சோ-வின் மருமகள் யார் தெரியுமா? தமிழ் சினிமாவில் முக்கிய நடிகை தான்
மறைந்த நடிகர் சோவின் மருமகள் யார் என உங்களுக்கு தெரியுமா? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
சோ
நடிகர் சோ தமிழ் சினிமா உலகம் மறக்க முடியாத பிரபலம். 60, 70 களில் காமெடியன், குணச்சித்திர நடிகர், கதாசிரியர் என தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்தவர் அவரை.
சோ ராமசாமி காமெடிக்கு மிக அதிகம் ரசிகர்கள் இருக்கிறார்கள். பத்திரிகையாளராகவும் இருந்த அவர் தொடங்கி நடத்திவந்த துக்ளக் இதழ் தற்போதும் வந்துகொண்டிருக்கிறது.
மருமகள்
நடிகர் சோவின் மருமகள் தற்போது தமிழ் சினிமாவில் பிசியாக இருக்கும் ஒரு நடிகை தான். அது வேறு யாரும் இல்லை ரம்யா கிருஷ்ணன் தான்.
சோவின் சகோதரி மகள் தான் ரம்யா கிருஷ்ணன்.
ரம்யா கிருஷ்ணன் சினிமாவில் நடிக்க வந்தது சோ அங்கிளுக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை என அவரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார். அதன் பின் படையப்பா படத்தில் அவர் நடித்தபோது அந்த படத்தை ரஜினி உடன் சேர்ந்து சோவும் பார்த்தாராம். படம் பார்த்துவிட்டு அவர் பாராட்டினாராம்.
முன்பு நினைத்தது தவறு என படையப்பா படம் பார்த்துவிட்டு தான் அவர் உணர்ந்தாராம்.
பீஸ்ட் ஹிந்தியில் மட்டும் வேறு டைட்டில்! அர்த்தம் இதுதானா?