உயிலை தேடி சீல் வைத்த வீட்டிற்குள் எகிறி குதித்த சோழன், நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது இதுதான்
அய்யனார் துணை
கடந்த வாரம் அய்யனார் துணை சீரியலில் வீட்டிற்கு சீல் வைக்கப்பட்ட காரணத்தினால் குடும்பத்தில் உள்ள அனைவரும் வீட்டிலிருந்து வெளியேறும் நிலைமை ஏற்பட்டது.

இதன்பின் தற்போது ஹோட்டலில் தங்கி வருகிறார்கள். ஆனால், எப்படியாவது தங்களது வீட்டை மீட்டெடுக்க வேண்டும் என நிலா முடிவு செய்துள்ளார். நடேசனுக்காக அவருடைய தந்தை கொடுத்த உயில் இருந்தால் மட்டுமே, இந்த வீடு தங்களுடையது என நிரூபிக்க முடியும்.
உயில்
இதனால், அந்த உயிலை தேடும் வேலையில் நிலா மற்றும் சோழன் இறங்கியுள்ளனர். உயில் என்று ஒன்று இருந்தால், கண்டிப்பாக அது வீட்டிற்குள்தான் இருக்க வேண்டும் என யோசித்து, தற்போது சீல் வைத்த வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து வீட்டிற்குள் இறங்கிவிட்டார் சோழன்.

இந்த சமயத்தில் அவருடைய பெரியப்பா அங்கு வருகிறார். நிலா, சோழன் அங்கு வந்துள்ளதை அவர் பார்த்துவிடுவாரா? அல்லது யார் கண்ணிலும் படாமல் உயிலை கண்டுபிடித்து, அங்கிருந்து நிலா, சோழன் தப்பித்து வீட்டை எப்படி மீட்டெடுக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
2026: மகாசிவராத்திரி நாளில் நடக்கும் முக்கிய பெயர்ச்சி.. பொன் பொருள் சேர்க்கை யாருக்கு? IBC Tamilnadu