28 Years Later ட்ரைலரில் ஜாம்பியாக வரும் உலக புகழ் பெற்ற நடிகர் யார் தெரியுமா.. அட இவரா
28 Years Later
ஜாம்பி கதைக்களத்தில் உருவாகும் படங்களுக்கு தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். அப்படி ஜாம்பிகதைக்களத்தில் சர்வைவல் ஆகும் கதாபாத்திரங்களை வைத்து, விறுவிறுப்பான திரைக்கதையில் மக்களை கவர்ந்த திரைப்படங்கள் தான் 28 DaysLater, 28 Weeks Later.
இந்த படங்களின் அடுத்த பாகமான 28 Years Later திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளிவரவுள்ளது. இப்படத்திற்கான ட்ரைலர் தற்போது வெளிவந்து, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ட்ரைலரில் வரும் ஒரு ஷாட்டில், நடிகர் ஒருவர் ஜாம்பியாக நடித்துள்ள காட்சி அனைவருக்கும் ஷாக் கொடுத்துள்ளது.
சிலியன் மார்பி
அவர் வேறு யாருமில்லை உலக புகழ் பெற்ற நடிகர் சிலியன் மார்பி தான். பீக்கி பிளைண்டர்ஸ் வெப் தொடரின் மூலம் பிரபலமாகி, பின் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவான ஓப்பன்ஹைமர் படத்தில் கதாநாயகனாக நடித்து அசத்தியிருந்த சிலியன் மார்பி, 28 Years Later படத்தில் நடித்துள்ளார்.
அதிலும் அவர் ஜாம்பியாக நடித்துள்ள காட்சி மிரட்டலாக இருக்கிறது என பலரும் கூறி வருகிறார்கள். இப்படத்தில் சிலியன் மார்பியுடன் இணைந்து ஜோடி கம்னர், Ralph Fiennes, Aaron Taylor-Johnson ஆகியோர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ 28 Years Later படத்தின் ட்ரைலர்..