அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்த விஜய் பட ஒளிப்பதிவாளர!!..
அனிமல்
அர்ஜூன் ரெட்டி படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கதில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைபடம் கடந்த டிசம்பர் 1 -ம் தேதி வெளியானது.
இப்படத்தில் தேவையற்ற அதீத வன்முறை மற்றும் ஆணாதிக்கம் நிறைந்திருப்பதாகப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
தற்போது இந்த பிரச்சனை பாலிவுட் வட்டாரத்திலும்,சமூக வலைதளங்களிலும் பெரும் சர்ச்சையை ஏர்படுத்தி வருகிறது.
விமர்சனம்
இந்நிலையில் வெந்து தணிந்தது காடு, கேப்டன் மில்லர் மற்றும் தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் விஜயின் 68 வது படத்தின் ஒளிப்பதிவாளராக இருக்கும் சித்தார்த்தா நுனி அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதில் அவர், நான் சமீபத்தில் அனிமல் திரைபடத்தை பார்த்தேன். சட்டத்திற்கு எதிரான வன்முறைகள் மற்றும் திருமணத்தின் பெயரில்பாலியல் வன்முறை, தவறான உறவுமுறைகள் எனப் பல நச்சுகள் இந்த படத்தில் உள்ளது.
இப்படி மிருகத்தனதுடன் நடந்துகொள்ளும் கணவனிடம், பெண் ஒரு ஊமையாக எதுவும் பேசாமல் இருப்பதுபோல் காட்சி அமைக்கப்பட்டு இருப்பது அபத்தம்.
திரைப்படத்தின் இறுதி காட்சியில் ரன்பீர் கபூரை ஆபாசமான செய்கைகளுடன் காட்சி அமைக்கப்பட்டு இருந்தது பார்வையாளர்களின் மனதை மிகவும் புண்படுத்துவதாக இருக்கிறது.
மேலும் இப்படம் அதிக வசூலைக் குவித்து வருவதாக சோசியல் மீடியாக்களில் தகவல் வெளியாகி வருவதை பார்கிறேன். இது நம் நாட்டின் சமூக நிலையைப் பிரதிபலிக்கிறதா?
'A'தணிக்கை சான்றிதழ் பெற்ற இப்படத்தை நான் ஹைதராபாத்தில் பார்த்த போது திரையரங்கில் சிறுவயதினர் பலரைப் பார்த்தேன். தணிக்கைக் குழுவும்,அவர்களின் பொறுப்பும் எங்கே போய்விட்டது என்று தெரியவில்லை என்று ஒளிப்பதிவாளர் சித்தார்த் கூறியுள்ளார்.

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu
