தளபதி விஜய்யை பிடிக்கும் என கூறிய முதல்வர் ஸ்டாலின்.. வைரலாகும் வீடியோ
தளபதி விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூலில் வரவேற்பை பெற்றது.
மேலும் தற்போது தனது கடைசி படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஹெச். வினோத் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தளபதி 69 படத்தை முடித்த கையோடு, முழுமையாக அரசியலில் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில், பழைய வீடியோ ஒன்று தற்போது நெட்டிசன்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், தமிழகத்தின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ளார்.
விஜய்யை பிடிக்கும்
அப்போது அங்கிருந்த பெண் ஒருவர், "நீங்க ஒரு அரசியல் தலைவர், உங்களுக்கு நேரமே இருக்காது. நீங்க சினிமா பார்ப்பீர்களா சார், அப்படி பார்த்தால் எந்த சினிமா பார்ப்பீர்கள், யாரை உங்களுக்கு பிடிக்கும்" என கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், "அப்பப்போ சினிமா பார்ப்பதுண்டு, நல்ல சினிமா தரமான படம்னா நிச்சயமா பார்ப்பேன். பொதுவான சினிமாவை பொறுத்தவரை சொல்லனும்னா, இளைஞர்களை கவரக்கூடிய வகையில் நடிக்குறதுல, விஜய்யை பிடிக்கும்" என கூறியுள்ளார். இது பழைய பேட்டியாக இருந்தாலும் தற்போது நெட்டிசன்களால் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.