விக்ரமின் கோப்ரா
அஜய் ஞானமுத்து டிமாண்டி காலணி, இமைக்கா நொடிகள் என இரண்டு வித்தியாசமான படங்களை கொடுத்து கவனிக்கப்படும் இயக்குனராக மாறியவர். இவர் அடுத்து இயக்கிய படம் தான் கோப்ரா.
விக்ரம் 7 கெட்டப்புகள் போட்டு நடித்துள்ள கோப்ரா கடந்த விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.
வெளியான முதல் நாள் நல்ல வசூல் தான் வந்தது, ஆனால் அடுத்தடுத்து படத்தின் விமர்சனம் மோசமாக வர வசூல் அப்படியே குறைந்தது.
பட பாக்ஸ் ஆபிஸ்
தமிழகத்தில் இப்படம் 5 நாள் முடிவில் வெறும் ரூ. 28 கோடி வரை தான் வசூலித்துள்ளது. இப்படியே பட வசூல் வந்தால் நஷ்டத்தை பெறும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படம் மொத்தம் எவ்வளவு வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
பிக் பாஸ் 6ல் நுழையும் விஜய்யின் பிரெண்ட்ஸ் பட நடிகை! போட்டோவுடன் இதோ