விக்ரமின் கோப்ரா
சியான் விக்ரம் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்த ஒரு திரைப்படம் கோப்ரா. இந்த படத்திற்காக விக்ரம் மிகவும் கஷ்டப்பட்டுள்ளார், 7 கெட்டப்புகளுக்கு மேல் போட்டு நடித்துள்ளார்.
ஒரு கதாபாத்திரத்திற்கு மேக்கப் போட்டு நடிப்பதே பெரிய கஷ்டம், இதில் விக்ரம் 7 கெட்டப் என்பது கஷ்டமான ஒரு விஷயம். அவரின் இந்த உழைப்பிற்காவது படம் செம ஹிட்டடிக்க வேண்டும் என ஆசைப்பட்ட ரசிகர்கள் உள்ளார்கள்.
ஆனால் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான இப்படம் முதல் நாளிலேயே மோசமான விமர்சனங்களை பெற்றது.

பட வசூல்
படத்தின் வசூலும் சொல்லும் படியாக இல்லை, தினம் தினம் வசூல் அப்படியே குறைந்த வண்ணம் உள்ளது.
6 நாள் முடிவில் படம் உலகம் முழுவதும் ரூ. 48 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம். இப்படியே வசூல் வந்தால் படம் கடுமையான நஷ்டத்தை சந்திக்க வாய்ப்பு உள்ளது.
நடிகை அசினின் கணவர் ராகுல் ஷர்மாவின் சொத்து மதிப்பு மட்டுமே இத்தனை கோடியா?
பிரித்தானியாவில் தொழிலாளர்களை விட..வேலையின்மை உதவித்தொகை பெறுவோர் அதிகம் உள்ள பகுதிகள் News Lankasri
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri