கோப்ரா
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைப்படம் கோப்ரா.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இன்று வெளியாகி இருக்க வேண்டிய இப்படம் சில காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டு வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.
இப்படம் வெளியாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் தற்போது கோப்ரா திரைப்படத்தின் synopsis வெளியாகியிருக்கிறது.

படத்தின் கதை
“பிரபல துருக்கிய இன்டர்பூல் அதிகாரி ஒருவர், மிக உயர்ந்த அதிகாரமுள்ள உலகத் தலைவர்களின் தடயங்கள் யற்ற படுகொலைகளை நிறைவேற்றும் மிகவும் தேடப்படும் குற்றவாளியைப் பின்தொடர்கிறார்.
குற்றவாளியான "கோப்ரா" பற்றிய பல்வேறு ஆதாரங்களில் இருந்து உள்ளீடுகள் மற்றும் தடயங்களைப் அவருக்கு கிடைக்கின்றன.
மீதமுள்ள படம் கோப்ரா என்ற கொலையாளியை பின் தொடருவதும், கோப்ரா செய்யும் கொலைகளின் உண்மை நோக்கத்தை வெளிபடுத்தும் விதமாக இருக்கும்” என தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் கண் முன்னே தந்தை SAC செய்து கொண்ட இரண்டாவது திருமணம்