Cocktail 2: திரை விமர்சனம்

Report

Cocktail 2: திரை விமர்சனம்

ஷாகித் கபூர், ராஷ்மிகா மந்தனா, க்ரித்தி சனோன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள Cocktail 2 திரைப்படத்தின் விமர்சனத்தை இங்கே பார்ப்போம் வாங்க.

Cocktail 2: திரை விமர்சனம் | Cocktail 2 Movie Review

கதைக்களம்

கல்லூரியில் இருந்து காதலித்து வரும் குணால் (ஷாகித் கபூர்), தியா (ராஷ்மிகா) இருவரும் திருமணம் செய்யாமலே ஒன்றாக வாழ்ந்து வருகின்றனர்.

இது இரண்டு பேரின் குடும்பங்களுக்கும் தெரியும் என்பதால், சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போதெல்லாம் எப்போது திருமணம் செய்துகொள்ள போகிறீர்கள் என்று பலரும் கேட்கிறார்கள். அப்போது குணால் தனக்கு தெரியாமல் யாருடனாவது தவறான உறவில் இருக்கிறாரோ என்கிற சந்தேகம் தியாவிற்கு வருகிறது.

Cocktail 2: திரை விமர்சனம் | Cocktail 2 Movie Review

அதனால் நாம் திருமணம் செய்துகொள்ளலாம் என்று குணாலிடம் கேட்க, அவரும் அதற்கு சம்மதம் தெரிவிக்க இருவரும் இத்தாலிக்கு செல்கின்றனர். அங்கு தியாவின் தோழியான அலிஷா (க்ரித்தி சனோன்) எதிர்பாராத விதமாக இருவரையும் சந்திக்கிறார்.

பின்னர் மூவரும் ஒன்றாக பயணிக்கத் தொடங்குகிறார்கள். அதனைத் தொடர்ந்து அவர்களது வாழ்வில் என்னென்ன திருப்பங்கள் ஏற்பட்டன; குணாலும், தியாவும் திருமணம் செய்துகொண்டார்களா என்பதே மீதிக்கதை.

Cocktail 2: திரை விமர்சனம் | Cocktail 2 Movie Review

படம் பற்றிய அலசல்

2012ஆம் ஆண்டில் சைப் அலிகான், தீபிகா படுகோனேவை வைத்து Cocktail என்ற வெற்றிப்படத்தை கொடுத்த ஹோமி அடஜானியா இப்படத்தை இயக்கியுள்ளார். முக்கோண காதல் கதையை கொஞ்சம் இழுத்து கூறியிருக்கிறார் என்றே கூறலாம்.

ஆனாலும் ஷாகித், ராஷ்மிகா மற்றும் க்ரித்தியின் நடிப்பினால் பெரிதாக சலிப்பு தட்டாமல் முதல் பாதி நகர்கிறது.

இத்தாலியில் எப்படி ஜாலியாக பொழுதை கழிப்பதை என்பதை காட்டுவதுபோல் முதல் பாதி இருந்தாலும், ஷாகித் மற்றும் க்ரித்தியின் இடையே மெல்ல மெல்ல ஈர்ப்பு உருவாவதை காட்டிய விதம் அருமை. யார் யாருடன் சேருவார் என்ற கேள்வியை கிளைமேக்ஸ் வரை கொண்டு சென்றவிதம் சிறப்பு. என்றாலும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம்.

Cocktail 2: திரை விமர்சனம் | Cocktail 2 Movie Review

காதலில் வரும் சந்தேகம், ஊடலுக்கு பின் மீண்டும் எழும் காதல் போன்ற உணர்வுகளை கதாபாத்திரங்களாக நேர்த்தியாக பிரதான நடிகர்கள் வெளிப்படுத்தியிருக்கின்றனர். ஹீரோயின்ஸுக்கு சீனியர் நடிகர் என்பதை ஷாகித் கபூர் பல இடங்களில் அசால்ட்டாக நடித்து காட்டியிருக்கிறார்.

சந்தேக கண்ணோடு பார்க்கும் ராஷ்மிகாவும், காதலை வெளிப்படுத்த துடிக்கும் க்ரித்தியும் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

க்ரித்தி சனோன் கவர்ச்சியின் எல்லைகளை தாண்டியிருப்பது ஒரு உறுத்தலாகவே தெரிகிறது. கிளைமேக்சில் வரும் காமெடி போர்ஷன் கலகலவென சிரிக்க வைக்கிறது. எதிர்பார்த்த கிளைமேக்ஸ்தான் என்றாலும் அதனை நிறைவாக காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர்.

பிரீதமின் இசையில் பாடல்கள் துள்ளல் ரகம்; பின்னணி இசை மிகப்பெரிய பலம். சந்தன கிருஷ்ணன், ரவிச்சந்திரனின் ஒளிப்பதிவு அருமை.

க்ளாப்ஸ்

ஷாகித் கபூர், ராஷ்மிகா, க்ரித்தி சனோன் வசனங்கள் எமோஷனல் காட்சிகள் இசை

பல்ப்ஸ்

ஓவர் கிளாமர் படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம்

மொத்தத்தில் இந்த Cocktail 2 ருசிக்கும் வகையில்தான் உள்ளது. இளைஞர்கள் கொண்டாடலாம்.

ரேட்டிங்: 3/5

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US