காஃபி வித் காதல் திரைவிமர்சனம்

Report

சுந்தர் சி தமிழ் சினிமாவின் ட்ரெண்டிற்கு ஏற்றார் போல் கலகலப்பான படங்களை எடுத்து ஸ்கோர் செய்பவர். அப்படி இந்த ஜெனரேஷன் காதலை மையமாக வைத்து காஃபி வித் காதல் என்ற படத்தை எடுத்துள்ளார், இப்படம் எப்படி வந்துள்ளது என்பதை பார்ப்போம் 

கதைக்களம்

காபி வித் காதல் பிக்பாஸ் அசீம், ஆரி போன்ற போட்டியாளர்களிடம் கூட பேசி ஜெயிச்சரலாம், ஆனால், இந்த படத்தின் கதையை ஒருவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டும் என்பது மிக கடுமையான டாஸ்க்.. அந்த டாஸ்க்கை முடிந்தளவு சொல்ல முயற்சி செய்கிறோம்.

காஃபி வித் காதல் திரைவிமர்சனம் | Coffee With Kadhal Review

ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய், டிடி 4 பேரும் சகோதர, சகோதரிகள். இதில் ஜெய்யை ஒரு தலையாக அமிர்தா காதலிக்கிறார். ஜெய்க்கோ பெரிய ஹோட்டல் அதிபராக வேண்டும் என்று ஒரு இடத்தை பார்க்கிறார், அந்த இடத்தின் உரிமையாளர் மகளை ஹோட்டல் கனவிற்காக ஓகே சொல்கிறார். அந்த பெண் அமெரிக்காவில் உள்ளார்.

அவர் அமெரிக்காவிலிருந்து வந்த போது ஜெய்க்கு பதிலாக ஜீவா பிக்கப் செய்ய போக, இவர்களுக்குள் காதல் பற்றிவிடுகிறது. ஆனால், ஒரு கட்டத்தில் தன் தம்பியின் கனவிற்காக தன் காதலை மறைத்து ஜீவா பெற்றோர் சொல்லும் பெண்ணையே திருமணம் செய்ய முடிவெடுக்கிறார், அவர் தான் ரைஸா வில்சன்.

காஃபி வித் காதல் திரைவிமர்சனம் | Coffee With Kadhal Review

ஆனால், ரைஸாவிடம் கொஞ்சம் அப்படி இப்படி முன்பே இருந்தவர் மூத்த அண்ணன் ஸ்ரீகாந்த்..இப்போது யார் யாரை திருமணம் செய்தார்கள், யார் யாரை பிரிந்தார்கள் என்பதே மீதிக்கதை..

படத்தை பற்றிய அலசல்

சுந்தர் சி எப்போதும் ஒரு குழப்பமான கதையை கையில் எடுத்து அதில் செம காமெடி காட்சிகளை புகுத்தி ஜாலியாக கொண்டு செல்வார். ஆனால், மிக மிக குழப்பான கதையை கையில் எடுத்துக்கொண்டு காமெடியை கம்மி செய்து பீல் குட் மூவியாக கொடுக்கிறேன் என ஒரு கட்டதிற்கு மேல் என்ன தாங்க சொல்ல வறீங்க மனநிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

காஃபி வித் காதல் திரைவிமர்சனம் | Coffee With Kadhal Review

யோகி பாபு, கிங்ஸ்லி வெண்டிங் ப்ளானராக வரும் காட்சிகள் பெரிய சிரிப்பலையை கொடுக்கவில்லை என்றாலும் அங்கங்கே சிரிக்க வைக்கின்றனர். படத்தில் நடித்த ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், பிரதாப், டிடி என அனைவருமே எனர்ஜியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

படமும் நல்ல பீல்குட் ஆக இருக்க வேண்டும் என்று கலர்புல்லான காட்சிகள், துள்ளலான இசை என டெக்கனிக்கல் ஒர்க்கில் செம்ம ஸ்ட்ராங். சுந்தர் சி படங்கள் என்றால் க்ளாமர் காட்சிகள் இருக்கும், ஆனால், இதில் முதல் பாதி க்ளாமர் ஸ்கொயர், க்யூப் எல்லாம் தாண்டுகிறது.   

க்ளாப்ஸ்

படத்தின் முதல் பாதி

எடுத்த கதையை முடிந்த அளவிற்கு குழப்பமில்லாமல் சொன்ன விதம்

ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை

பல்ப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி பெரிய திருப்பம் இல்லாமல் செல்வது

மிகவும் எதிர்ப்பார்த்த காமெடி காட்சிகள் குறைவு

மொத்தத்தில் தாஜ் ஹோட்டலிலே விருந்து என்றாலும் நன்றாக இருந்தால் தானே காஃபியை குடிக்க முடியும்.

காஃபி வித் காதல் திரைவிமர்சனம் | Coffee With Kadhal Review

லவ் டுடே திரைவிமர்சனம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US