முடிவுக்கு வரும் முக்கிய ப்ரைம் டைம் சீரியல்! ரசிகர்கள் ஷாக்
கலர்ஸ் தமிழின் ஒரு முக்கிய சீரியல் விரைவில் முடியப்போகிறது.
கலர்ஸ் தமிழ்
சின்னத்திரையில் சீரியல்களில் இடையே போட்டி எப்போதும் இருந்து வருகிறது. டிஆர்பி ரேட்டிங் பெறுவதற்காக சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு சேனல்கள் புதுப்புது தொடர்களை அறிமுகப்படுத்தி வருகின்றன.
அதற்காக ரேட்டிங் குறைவாக பெறும் சீரியல்கள் முடிக்கப்படுவது வழக்கம். தற்போது கலர்ஸ் தமிழில் ஒரு முக்கிய ப்ரைம் டைம் சீரியல் முடிவடைய இருக்கிறது.
அபி டெயிலர்
கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி அவரும் அபி டெயிலர் தொடர் தான் தற்போது கிளைமாக்ஸை நெருங்கி இருக்கிறது. விரைவில் இந்த சீரியல் முடிய இருப்பதாக வந்த தகவல் அந்த தொடரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து இருக்கிறது.
ரேஷ்மா சினிமாவில் நடிக்க இருப்பதால் தான் இந்த சீரியலை வேகமாக நிறைவு செய்கிறார்கள் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
ஆள் அடையாளம் தெரியாத அளவிற்க்கு மாறிய புகழ்.. வீடியோவுடன் இதோ