மறைந்த மயில்சாமி மீது பிரபல நடிகர் குற்றச்சாட்டு- யாரு தெரியுமா?
நடிகர் மயில்சாமி
தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்திய ஒரு துக்கம் என்றால் அது நடிகர் மயில்சாமியின் இறப்பு தான். தீவிர சிவ பக்தனான இவர் சிவராத்திரி பூஜை முடித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார்.
அப்போது பசித்ததால் சாப்பிட்ட அவருக்கு திடீரென மூச்சு விட முடியாமல் போனது, எனவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே தனது மகன் மடியில் உயிரிழந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 19ம் தேதி உயிரிழந்தார், அவர் மறைவுக்கு பிறகு தான் மக்கள் அனைவருமே அவர் செய்த நல்ல விஷயங்கள் குறித்து பேச ஆரம்பித்தார்கள்.
பிரபல நடிகர்
நடிகர் மயில்சாமி குறித்து நடிகர் சிங்கமுத்து குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதாவது அவர் கூறுகையில், குல தெய்வ கோவிலுக்கு சென்றதால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்த வர முடியவில்லை.
எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான மயில்சாமி தன்னிடம் உதவி என வருபவர்களுக்கு மனதார உதவிகள் செய்து வந்தார். ஆனால் மற்றவர்களுக்கு ஓடியோடி உதவி செய்த மயில்சாமி தன் உடல்நலத்தை பேணவில்லை என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
நீண்ட நாள் தர்மம் செய்ய வேண்டிய நீ ஏன் உன் உடம்பை பார்த்துக் கொள்ளாமல் போய்விட்டாய் என்று எமோஷ்னலாக பேசியுள்ளார் சிங்கமுத்து.
எதிர்நீச்சல் சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட எலும்பு முறிவு- தற்போது அவரது நிலைமை என்ன, புகைப்படத்துடன் இதோ

எங்களுக்கு ஒரே மகன், காலையில் தான் வீடியோ காலில் பேசினான்: உயிரிழந்த இந்திய ராணுவ வீரரின் பெற்றோர் உருக்கம் News Lankasri
