11 ஆண்டுகளுக்கு பின் இணையும் காம்போ.. ரஜினியின் ஜெயிலர் 2வில் இந்த காமெடி நடிகரா?
ஜெயிலர் 2
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் படம் கூலி. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கூலி படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. முதல் பாகத்தை போலவே நடிகர் சிவராஜ்குமார் மற்றும் மோகன்லால் கேமியோ ரோலில் நடிக்கின்றனர்.
இந்த நடிகரா?
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது, ஜெயிலர் 2 திரைப்படத்தில் சந்தானம் நடிக்க உள்ளதாக தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக ஹீரோ ரோல்களில் மட்டும் நடித்து வந்த சந்தானம், சிம்புவின் எஸ்.டி.ஆர்.49 படத்திற்காக மீண்டும் காமெடியனாக அவதாரம் எடுத்துள்ளார்.
இதனால் தற்போது ரஜினிகாந்த் படத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் 11 வருடங்களுக்கு பின் இணைந்து நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை.