மிகவும் சிம்பிளாக முடிந்த காமெடி நடிகர் விவேக் மகளின் திருமணம்- அப்பாவை போல என்ன செய்துள்ளார் பாருங்க
நடிகர் விவேக்
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது, எந்த ஒரு முன்னணி நடிகரின் படங்கள் எடுத்தாலும் காமெடிக்கு பெரிய இடம் உள்ளது.
ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட பல திரை ஜாம்பவான்களை அறிமுகப்படுத்திய இயக்குனர் பாலசந்தரால் திரையுலகில் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் விவேக்.
90களில் ரஜினி, கமல், விஜய், அஜித், சரத்குமார், விஜயகாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். காமெடியில் சமூகத்துக்கு தேவையான கருத்தை கூறி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.
ABJ அப்துல்கலாம் அவர்களின் வார்த்தையை வேத வாக்காக எடுத்துகொண்டு 1 கோடி மரம் நடுவதை தன்னுடைய வாழ்நாள் லட்சியமாக எடுத்துகொண்டு அதற்கான வேலைகளை கவனித்து வந்தார்.
இந்த நிலையில் நடிகர் விவேக் கடந்த 2021ம் ஆண்டு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மகளின் திருமணம்
தற்போது நடிகர் விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு நேற்று அவருடைய தந்தை வாழ்ந்த வீட்டிலேயே எளிமையாக முறையில் திருமணம் நடந்துள்ளது.
தேஜஸ்வினி-சிரஞ்சீவி பரத் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
மேலும் இவர்களின் திருமணத்தில் கலந்துகொண்டவர்களுக்க விவேக்கின் கொள்கையை ஊக்குவிக்கும் விதமாக மரக்கன்றுகள், மூலிகை பூச்செடிகள் போன்றவை வழங்கப்பட்டது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
