கமல்ஹாசனுடன் இந்தியன் படத்தில் நடித்த நடிகையா இது?- 50 வயதில் எப்படி உள்ளார் பாருங்க
இந்தியன்
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் மிகவும் ஹிட்டான திரைப்படம் இந்தியன்.
1996ம் ஆண்டு கமல்ஹாசன், மனிஷா கொய்ராலா, கஸ்தூரி, கவுண்டமணி, ஊர்மிளா என பலர் நடித்த இப்படம் ரூ. 3.5 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வந்த அனைத்து பாடல்களும் ஹிட் தான். தற்போது ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 படம் தயாராகி வருகிறது,
விரைவில் ரிலீஸ் குறித்த தகவல்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஊர்மிளா
குழந்தை நட்சத்திரமாக படங்களில் நடிக்க தொடங்கிய நடிகைகள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் இணைந்தவர் தான் நடிகை ஊர்மிளா.
1989ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான சாணக்கியன் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார். மலையாளத்தை தொடர்ந்து தெலுங்கிலும் படங்கள் நடித்து வந்தவர் தமிழில் ஷங்கரின் இந்தியன் படம் மூலம் அறிமுகமானார்.
முதல் படத்திலேயே அதிக கிளாமர் காட்டி நடித்து இளசுகளை ஈர்த்தவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் பயணிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இந்தியன் படத்தோடு காணாமல் போய்விட்டார்.
தற்போது 50 வயதாகும் ஊர்மிளாவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அட இந்த வயதிலும் கலக்குகிறாரே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri