குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை- யார் தெரியுமா?
குக் வித் கோமாளி
நாம் இதுவரை தமிழில் எத்தனையோ சமையல் நிகழ்ச்சிகளை பார்த்திருப்போம்.
அந்த சமையல் நிகழ்ச்சியிலும் ஏதாவது வித்தியாசம் காட்ட வேண்டும் என முயற்சி செய்து குக் வித் கோமாளி என்று பெயர் வைத்து ஒரு நிகழ்ச்சி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
முதல் சீசன் அமோக வெற்றி, அடுத்தடுத்து 2, 3 சீசன்களும் செம ஹிட்டாக ஒளிபரப்பானது.
அண்மையில் 4வது சீசனிற்கான புரொமோ வெளியானது, அதில் கோமாளிகள் யார் யார் என்ற விவரம் மட்டுமே இருந்தது.
பிரபல நாயகி
விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக ஒளிபரப்பாகும் தொடர்கள் பல உள்ளன. சின்னத்திரை நாயகிகள் என்று எடுத்தால் அதில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நடிகைகள் தான் பெரும்பாலும் அதிகம் வருவார்கள்.
அப்படி ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நாயகி தான் மௌன ராகம் 2 தொடர் ரவீனா. சின்ன பெண் என்றாலும் நடிப்பில் அசத்தி வருகிறார். சந்தோஷம், துக்கம், கோபம் என எந்த சீன் வந்தாலும் அதில் அசால்ட்டாக நடித்து அசத்தி விடுகிறார்.
தற்போது மௌன ராகம் சீரியலில் கதைக்களம் மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.
நடிகை ரவீனா சீரியலை தாண்டி குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்க இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.
6 நாட்களாக தொடரும் கடும் போட்டி.. டாப் இடத்தில் இருப்பவர் விஜய்யா, அஜித்தா