Final நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிவடைந்தது- குக் வித் கோமாளி 4 டைட்டில் வின்னர் யார்?
குக் வித் கோமாளி 4
விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி என்ன ரெடியா பங்காலி என்ற புகழின் குரலுடன் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி.
சமையல் ப்ளஸ் நிறைய கலாட்டா என ஒளிபரப்பாகி வந்த இந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்.
அடுத்தடுத்து 3 சீசன்களுக்கு கிடைத்த வெற்றி இப்போது 4வது சீசனிற்கும் கிடைத்துள்ளது.
இதுவரை கோமாளியாக இருந்த சிவாங்கி குக்காக வர கோமாளியாக இருந்த மணிமேகலை நிகழ்ச்சியை விட்டே செல்ல பின் தொகுப்பாளராக வர என ஏகப்பட்ட மாற்றங்கள் இந்த சீசனில் நடந்தது.
அப்படியே பல மாற்றங்களுடன் தற்போது 4வது சீசனும் முடிவுக்கு வந்துள்ளது. இன்று 4வது சீசனில் இறுதிக்கட்ட அதாவது Final நிகழ்ச்சியின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த சீசனின் வெற்றியாளராக இருப்பார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்களும் ஆர்வமாக தான் உள்ளார்கள்.
வெற்றியாளர் யார் என்பது வெளியாகவில்லை, ஆனால் சிவாங்கி அல்லது ஆண்ட்ரியா இருவரில் தான் யாராவது வெற்றியாளராக இருப்பார்கள் என கூறப்படுகிறது.
பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்