பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா விஜய்? ரஜினியால் கொந்தளித்த விஜய் ரசிகர்கள்
Hukum பாடலால் சர்ச்சை
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். இப்படத்தில் இடம்பெறும் Hukum எனும் பாடல் கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டாவது சிங்கிளாக வெளிவந்தது. இந்த பாடலில் இடம்பெற்ற வரிகள் விஜய் ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Hukum பாடலில் 'இவன் பேர தூக்க நாலு பேரு, பட்டத்த பறிக்க நூறு பேரு' என்ற வரிகள் விஜய் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது. இந்த வரிகள் விஜய்யை தான் குறிப்பிடுகிறது என்றும், வேண்டுமென்றே தான் விஜய்யை தாக்கி ரஜினிகாந்த் தன்னுடைய படத்தில் இந்த வரிகளை வைத்துள்ளார் என்றும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பட்டத்தை பறிக்க நினைக்கிறாரா
கடந்த சில வருடங்களாக சூப்பர்ஸ்டார் பட்டத்திற்கு பல சண்டைகள் நடைபெற்று வருகிறது. விஜய் தான் தற்போதைய சூப்பர்ஸ்டார் என தயாரிப்பாளர் கூற ரஜினி ரசிகர்கள் கொந்தளித்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் ரஜினி இப்படி வரிகளை தன்னுடைய படத்தில் வைத்துள்ளார் என தற்போது பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
ஆனால், தற்போது மட்டுமின்றி சிவாஜி படம் வெளிவந்த போதே இப்படிப்பட்ட விஷயங்களை ரஜினி செய்துள்ளார். ஆகையால் இது ஒன்றும் புதிதல்ல. பாடல் வரிகளால் இரு ரசிகர்கள் கூட்டத்திற்கு இடையே பெரும் சண்டை சமுக வலைத்தளத்தில் உண்டாகியுள்ளது.
ஆனால், அவர்களுக்கு ஒன்று புரியவில்லை, நடிகர் விஜய்யே நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர் தான் என்பது. அண்ணாமலை படத்தில் இடம்பெற்ற வசனத்தை பேசி தான் தனது தந்தையிடம் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை விஜய் பெற்றார். அதுமட்டுமின்றி தன்னுடைய ஆரம்பகால படங்களில் ரஜினிகாந்தின் ரெபெரென்ஸ் கூட விஜய்யின் படங்களில் இருக்கும்.
அப்படி ரஜினியின் தீவிர ரசிகராக இருக்கும் விஜய் எந்த ஒரு இடத்திலும் தன்னை அடுத்த சூப்பர்ஸ்டார் என சொல்லிக்கொள்ளவில்லை என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். இதை பற்றி பொதுவான சினிமா ரசிகர்கள் என்ன நினைக்கிறீர்கள்.
ரசிகர் செயலால் மேடையிலிருந்து தெறித்து ஓடிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ