குக் வித் கோமாளி 5வது சீசனில் இந்த பிரபல சீரியல் நடிகையா?- உறுதியான போட்டியாளர்கள் லிஸ்ட்
குக் வித் கோமாளி 5
குக் வித் கோமாளி, என்ன ரெடியா பங்காளி என புகழ் ஒரு பழைய புரொமோவில் கூறுவார்.
தற்போது அதற்கு ஏற்ப எப்போது இந்த சமையல் நிகழ்ச்சி தொடங்கும், எப்போது பார்ப்போம் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
வரும் ஏப்ரல் 27ம் தேதியில் இருந்து குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக உள்ளது.
ஒரேஒரு ஹிட் படம், பல கோடி வசூல் BMW கார் வாங்கியுள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்- புகைப்படத்துடன் இதோ
இதில் இத்தனை சீசன்கள் நடுவராக இருந்து வெங்கடேஷ் பட் இல்லை, அவருக்கு பதில் மாதம்பட்டி ரங்கராஜ் வருகிறார். மேலும் இந்த சமையல் நிகழ்ச்சியின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் 5வது சீசனில் மாறியுள்ளனர்.
போட்டியாளர்கள்
நடுவர், தொகுப்பாளர்கள், சில கோமாளிகள் குறித்த தகவல் ஏற்கெனவே வெளியாகிவிட்டது, வீடியோவுடன் வெளியானது. குக் வித் கோமாளி 5வது சீசன் போட்டியாளர்கள் யார் என்பது தான் இன்னும் தெளிவாக தெரியவில்லை.
இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் ஒரு 5 போட்டியாளர்களின் பெயர்கள் வலம் வருகிறது.
அதில், பிரபல தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே, சீரியல் நடிகை சுஜிதா, அக்ஷய் கமல், யூடியூப பிரபலம் இர்பான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் உறுதி செய்யப்பட்ட போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.