குத் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் முன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள்! யார் யார் தெரியுமா?
குத் வித் கோமாளி சீசன் 3
பிரபல விஜய் டிவி ஒளிப்பரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி, மக்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ள இந்த நிகழ்ச்சி இரண்டு சீசன்களை கடந்து தற்போது மூன்றாவது சீசன் நடந்து வருகிறது.
மேலும் தற்போது இறுதிபோட்டியை நெருங்கியுள்ள குக் வித் கோமாளி சீசன் 3 கடந்த வாரம் வைல்ட் கார்டு போட்டி நடைப்பெற்றது. இதில் சந்தோஷ் மற்றும் கிரேஸ் இருவரும் இறுதிப்போட்டிக்கு தேர்வாகி இருக்கின்றனர்.
இதற்கிடையே கடந்த வாரமே குக் வித் கோமாளியின் இறுதிப்போட்டி நடைபெற்று முடிந்துள்ளது, இதனை உறுதிபடுத்தும் வகையில் சிவாங்கி அங்கு எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் முதல் மூன்று இடங்களை பிடித்த போட்டியாளர்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆம், அதன்படி ஸ்ருதிக்கா முதல் இடத்தையும், தர்ஷன் இரண்டாவது இடத்தையும், அம்மு அபிராமி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக் தகவல் வெளியாகியுள்ளது. இது எந்தளவிற்கு உண்மையென தெரியவில்லை இப்படியொரு தகவல் இணையத்தில் பரவி வருகிறது.
சேரி மக்கள் பற்றி பேசியதற்கு வீடியோவில் மன்னிப்பு கேட்ட பிரிகிடா.. வழக்கு போடுவதாக மிரட்டினார்களா?