சிவாங்கியை திட்டிய நடுவர்! CWC இந்த வார எலிமினேஷன் இவரா? அதிர்ச்சி ப்ரொமோ
குக் வித் கோமாளி
குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த வாரம் எலிமிநேஷன் போட்டி நடைபெற இருப்பதால் வெளியேறப்போவது யார் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
இந்த வாரம் போட்டியாளர்கள் அசைவம் தான் சமைக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. போட்டியாளர்கள் ஒரு சக்கரத்தை சுற்றி அவர்களுங்கான டிஷ் என்ன என்பதை தேர்வு செய்தனர். அப்போது சிவாங்கிக்கு squid வந்தது.
இதுவரை சிவாங்கி ஒரு முட்டையை கூட சமைத்தது இல்லை, ஆனால் இந்த முறை அசைவம் செய்தே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் வந்துவிட்டது.
திட்டிய நடுவர்
எலிமிநேஷன் லிஸ்டில் இறுதியாக சிவாங்கி, ஷெரின் மற்றும் ஸ்ருஷ்டி ஆகியோர் இருக்கின்றனர். அந்த நேரத்தில் நடுவர் தாமு சிவாங்கியை திட்டி பேசி இருக்கிறார். "நான் வெஜிட்டேரியன், அதனால் Nonveg செய்ய மாட்டேன் என சொல்ல முடியாது. இது தான் ஷோ format" என தாமு கூறியிருக்கிறார்.
அதனால் இந்த வாரம் சிவாங்கி தான் எலிமினேஷனா என கேள்வி எழுந்திருக்கிறது.
வளைகாப்புக்கு கிளம்பும் மீனா.. வில்லன் அப்பா செய்த அதிர்ச்சி காரியம்! பாண்டியன் ஸ்டோர்ஸில் இன்று