பிக் பாஸ் முடிவு.. அடுத்த வாரம் முதல் இந்த ஷோ தான்
பிக் பாஸ்
விஜய் டிவியில் பிக் பாஸ் வருகிறது என்றால் அதற்காக ஒரு மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கும். அதனால் அதற்கு நேரம் ஒதுக்க சீரியல்களின் நேரத்தையும் மாற்றி அமைக்கும் விஜய் டிவி. சில நேரங்களில் சீரியலை அவசரமாக முடிப்பது அல்லது நிறுத்திவைப்பது போன்ற விஷயங்களும் நடக்கும்.
அப்படி விஜய் டிவியில் தற்போது பிக் பாஸ் ஆறாம் சீசன் முடிவுக்கு வர இருக்கிறது. இன்றோடு ஷோ முடிவதால் நாளை முதல் சிறகடிக்க ஆசை மற்றும் மகாநதி ஆகிய இரண்டு சிரியல்களை விஜய் டிவி களமிறக்குகிறது.
குக் வித் கோமாளி 4
சிறகடிக்க ஆசை தொடர் இரவு 9.30 மணிக்கும், மகாநதி தொடர் இரவு 10 மணிக்கும் வர இருக்கின்றன.
அதே போல வார இறுதி நாட்களில் பிக் பாஸுக்கு மாற்றாக அடுத்த வாரம் முதல் குக் வித் கோமாளி 4ம் சீசன் வர இருக்கிறது. 28 ஜனவரி முதல் சனி மற்றும் ஞாயிறு தோறும் இரவு 9 மணிக்கு குக் வித் கோமாளி ஷோ ஒளிபரப்பாக இருக்கிறது.
பிரேம்ஜிக்கு ரகசிய திருமணம்? நெருக்கமான புகைப்படத்தை பதிவிட்ட பின்னணி பாடகி

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
