ஷிவாங்கிக்கு பதில் என்னை ஏன் அனுப்புனீங்க என கேட்டேனா? CWC கிஷோர் ராஜ்குமார் விளக்கம்
குக் வித் கோமாளி
விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவின் நான்காம் சீசன் சென்ற மாதம் தொடங்கியது. தற்போது மூன்று வாரங்கள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் ஒரு போட்டியாளர்கள் எலிமினேட் ஆகி இருக்கிறார்.
கிஷோர் ராஜ்குமார் தான் முதல் ஆளாக எலிமினேட் ஆனார். வழக்கம் போல அவரும் CWC ஷோ பற்றியும் அதில் பங்கேற்ற அனுபவம் பற்றியும் உருக்கமாக பேசிவிட்டு வெளியேறினார்.
சிவாங்கி பற்றி பேசினாரா?
எலிமினேஷனுக்கு பின் கிஷோர் கோபமாக நிகழ்ச்சி குழுவினர் பற்றி பேசியதாக தகவல் பரவி இருக்கிறது. "சிவாங்கியை அனுப்பாமல் என்னை ஏன் அனுப்புனீங்க" என அவர் கோபமாக கேட்டதாக Youtubeல் சிலர் வீடியோ வெளியிட்டு இருக்கின்றனர்.
அது பற்றி விளக்கம் கொடுத்து இருக்கும் கிஷோர் ராஜ்குமார் தான் அப்படி ஒரு பேட்டியே கொடுக்கவில்லை என விளக்கம் கொடுத்து இருக்கிறார். மேலும் அது முற்றிலும் பொய்யான செய்தி என அவர் கூறி இருக்கிறார்.
சமந்தாவா இது? சிறுவயதில் எப்படி இருக்கிறார் என்று பாருங்க..