கூல் சுரேஷுக்கு பணம் கொடுக்கும் ஒரே நடிகர்! சிம்பு மட்டும் இல்லை இவரும் தான்.. யார் பாருங்க
கூல் சுரேஷ்
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் பெயரை அதிகம் பாப்புலர் ஆக்கியது கூல் சுரேஷ் தான். அவர் தியேட்டர் முன்பு youtube சேனல்களுக்கு அளிக்கும் பேட்டியில் எப்போதும் 'வெந்து தணிந்தது காடு.. வணக்கத்த போடு' என தொடர்ந்து சொல்லியே அதிகம் ப்ரோமோஷன் செய்தார்.
அதற்காக சிம்புவே கூல் சுரேஷுக்கு ட்விட்டர் லைவ் உரையாடலில் கூறி இருந்தார். தற்போது வெந்து தணிந்தது காடு படமும் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பும் வசூலும் குவித்து வருகிறது.
உதவும் ஒரே நடிகர்
தற்போது நடிகர் கூல் சுரேஷ் அளித்து இருக்கும் பேட்டியில் தனக்கு உதவுவது சிம்பு மட்டும் இல்லை சந்தானமும் தான் என கூறி இருக்கிறார்.
"உனக்கு வருமானம் என்ன என பலரும் கேட்கிறார்கள். தற்போது வரை என் நண்பன் சந்தானம் தான் என்னை பார்த்துக்கொள்கிறார். என்னை பற்றி யாரவது சந்தானத்திடம் தவறாக கூறினால் கூட அவர் ஏற்றுக்கொள்ள மாட்டார். எனக்கு உதவி செய்வது ஒரே இடம் தான். அதையும் பார்த்து சிலர் பொறாமை படுகிறார்கள்" என கூல் சுரேஷ் கூறி இருக்கிறார்.
தமிழகத்தில் வசூல் வேட்டை நடத்தும் வெந்து தணிந்தது காடு.. இரண்டு நாட்களில் இத்தனை கோடியா

ஹெலிகொப்டரிலிருந்து கொட்டிய பணம்: இறுதிச்சடங்கில் பங்கேற்றவர்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி News Lankasri
