பிரதீப் போக அவுங்க தான் காரணம்..எலிமினேஷனுக்கு பின் ரெட் கார்ட் விவகாரம் குறித்து கூல் சுரேஷ்..
ரெட் கார்ட்
பிக் பாஸ் சீசன் 7 ல் அதிகம் பேசப்பட்ட விஷயம் என்றால் அது பிரதீப்பின் ரெட் கார்ட் விவகாரம் தான். பிரதீப் பெண்களிடம் மோசமாக நடந்து கொண்டார் என்று அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரதீப்க்கு ஆதரவாக பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர்.
கூல் சுரேஷ்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய கூல் சுரேஷ், ரெட் கார்ட் விவகாரம் குறித்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில், பிரதீப் தான் இந்த சீசன் பைனலில் கப் அடிப்பார் என்று எதிர்பார்த்தேன். அவர் மீது மிகுந்த பாசம், அன்பையும் வைத்து இருந்தேன். ஆனால் காலத்தின் கட்டாயம் பாதியில் சென்றுவிட்டார்.
எனக்கு அவர் வெளிய போகவிருப்பம் இல்லை. இந்த விஷயம் இவ்ளோ பெருசா ஆகும் என்று தெரியாது. இந்த பிரச்சனையை வேற மாதிரி கொண்டு போய்விட்டார்கள், அதை நான் எதிர்பார்க்கவில்லை. அது என்னுடைய மனதிற்கு கஷ்டமாக தான் இருந்தது. என்று கூல் சுரேஷ் கூறியுள்ளார்.