பிக் பாஸ் பெண்களை தவறாக பேசிய கூல் சுரேஷ்.. இதுதான் இவருடைய உண்மை முகமா
கூல் சுரேஷ்
பிக் பாஸ் 7 நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக களமிறங்கியவர் கூல் சுரேஷ். இவர் திரைப்பட நடிகர் என்பதை நாம் அறிவோம்.
ஆனால், திரைப்படங்களை தனது பாணியில் திரையரங்க வெளியில் நின்று இவர் விமர்சனம் செய்தபோது தான் வைரலானார். இதை தொடர்ந்து பல படங்களுக்கும் செய்து வந்தார்.
மேலும் தற்போது பிக் பாஸ் 7ல் என்ட்ரி கொடுத்துள்ள கூல் சுரேஷ் உள்ளே நுழைந்தவுடன் கண்டன்ட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார். கண்டிப்பாக இவர் பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் வலுவான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவறாக பேசிய கூல் சுரேஷ்
இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து கூல் சுரேஷ் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் 'என்னங்க பிக் பாஸ், என்ன பிக் பாஸு.. சின்ன சின்ன பொண்ணுங்கள கூட்டிகிட்டு வந்து, அரைகுறை ஆடையில் ஆட விடுறீங்க' என பெண்களை தவறாக பேசியிருக்கிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு பல மாதங்களுக்கு முன் இவர் பேசிய இந்த வீடியோ தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் இதுதான் இவருடைய உண்மையான முகமா என கேட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இதோ அந்த வீடியோ..
எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு? pic.twitter.com/fzw79GVqZo
— ???? ???? ??? & ???? (@FilmFoodFunFact) October 3, 2023