வாடகை கொடுக்க கூட பணமில்லை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

Parthiban.A
in பிரபலங்கள்Report this article
வெந்து தணிந்தது காடு படத்தின் ரிலீஸ் அன்று நடிகர் கூல் சுரேஷ் தியேட்டர் வந்தபோது அவருக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. அப்போது கார் கண்ணாடியும் உடைந்துவிட்டது.
'சிம்பு ரசிகர்கள் கூல் சுரேஷ் கார் கண்ணாடியை அடித்து நொறுக்கிவிட்டார்கள்' என செய்தி பரவிய நிலையில் அது பற்றி கூல் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அடித்து நொறுக்கவில்லை
சிம்பு ரசிகர்கள் காரை அடித்து நொறுக்கவில்லை, அவர்கள் எனக்கு கை கொடுக்க வேண்டும் என்கிற ஆசையில் தான் கார் மீது ஏறிவிட்டார்கள். அதற்காக நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என சொல்கிறார்கள், ஆனால் நான் அதை எதிர்பார்க்கவில்லை.
வாடகை கொடுக்க கூட பணமில்லை
நான் சினிமாவில் தான் இருக்கிறேன். உங்களை மகிழ்விக்க தான் தியேட்டருக்கு வந்து பேசுகிறேன், அதனால எனக்கு என்ன பணம் வருகிறதா.
இப்போதும் நான் கஷ்டத்தில் தான் இருக்கிறேன். வாடகை கொடுக்க கூட பணமில்லை, வண்டி டியூ கட்ட முடியவில்லை என கண்ணீருடன் கூல் சுரேஷ் கூறினார்.
சிம்பு இப்படி சொன்னார்..
இந்த சம்பவத்திற்கு பிறகு சிம்பு என்னிடம் பேசினார். 'நான் (சிம்பு) தியேட்டருக்கு போனால் கூட இப்படி வரவேற்பு கிடைத்திருக்குமா என தெரியவில்லை, ஆனால் உனக்கு கிடைத்திருக்கிறது, அதை விட்டுவிடாதே' என கூறினார்.
எனக்கு சோறு போட சந்தானம் இருக்கிறார். இத்தனை நாள் சிம்புவுக்காக தான் இதை செய்தேன், இனிமேல் நான் வரவில்லை என கண்ணீருடன் வீடியோவில் கூல் சுரேஷ் பேசி இருக்கிறார்.
பிக் பாஸ் 6ல் நுழையும் ஜீ தமிழின் முக்கிய சீரியல் நடிகை! எதிர்பார்க்காத ஒருவர்

உயிரிழந்த கன்றின் உடலை பார்த்து கண்ணீர் விட்ட பசு ..அடுத்து நடந்த சம்பவம் - பீதியில் மக்கள்! IBC Tamilnadu
