கபாலி சாதனையை முறியடித்த கூலி.. வெளிநாட்டில் புதிய மார்க்கெட்டை ஓபன் செய்த ரஜினிகாந்த்
கூலி
கூலி திரைப்படம் வருகிற 14ம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் முதல் முறையாக நடித்துள்ளார்.
நாகர்ஜுனா, சௌபின் சாஹிர், ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், உபேந்திரா, அமீர் கான் என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். மாபெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
கபாலி சாதனையை முறியடித்த கூலி
இந்நிலையில், கூலி திரைப்படம் முன் பதிவிலேயே பல சாதனைகளை தொடர்ந்து படைத்து வருகிறது. வட அமெரிக்காவில் இதுவரை, முன் பதிவு ப்ரிமியரில் மட்டுமே 2 மில்லியன் வசூல் செய்துள்ளது. இதற்கு முன் கபாலி திரைப்படம் 1.9 மில்லியன் வசூல் செய்திருந்த நிலையில், அந்த சாதனையை தற்போது கூலி முறியடித்துள்ளது.
மேலும் முதல் முறையாக ஒரு தமிழ் திரைப்படத்திற்கு ஜெர்மனியில் 10,000க்கும் மேல் டிக்கெட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. இதன்மூலம் ஜெர்மனியில் தமிழ் சினிமா படங்களுக்கு புதிய மார்க்கெட் ஓபன் ஆகியுள்ளது. இதுமட்டுமின்றி இத்தாலி நாட்டிலும் மார்க்கெட் ஓபன் ஆகும் என தகவல் வெளியாகியுள்ளது.

காஸாவில் நடக்கக் காத்திருக்கும் பேரழிவு... சர்வதேச ஒத்துழைப்பிற்கு கோரும் பிரான்ஸ் ஜனாதிபதி News Lankasri
