மோனிகா பாடலை மீண்டும் வைரலாகிய சௌபின் சாஹிர்.. ரீல்ஸ் வீடியோ இதோ!
சௌபின் சாஹிர்
மலையாள திரையுலகில் நடிகராக தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் சௌபின் சாஹிர். இவர் நடிப்பில் வெளியான ரோமச்சன், மஞ்சுமல் பாய்ஸ் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.
தற்போது கூலி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அதுவும் தயால் என்ற கதாபாத்திரத்தில் வெறித்தனமான வில்லனாக இந்த திரைப்படத்தில் மிரட்டி இருந்தார்.
இவருடைய நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள். குறிப்பாக கூலி படத்தில் இடம் பெற்ற மோனிகா பாடலில் இவருடைய நடனம் பெரிய அளவில் புகழ் பெற்றது.
யாருடன் தெரியுமா?
இந்நிலையில், மோனிகா பாடலுக்கு தற்போது சௌபின் அவரது மகள் மற்றும் மகனுடன் இணைந்து நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை அவரது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதோ,