வாரிசு விழாவுக்கு கடைசி நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனையா.. சொன்னபடி நடக்குமா?
வாரிசு
விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை மறுநாள் டிசம்பர் 24ம் தேதி மாலை 4 மணிக்கு தொடங்க இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்து இருக்கிறார்கள்.
இரண்டு வருடங்களுக்கு பிறகு விஜய் பட விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார் என்பதால் ரசிகர்கள் அவரை காண வெறித்தனமாக காத்திருக்கிறார்கள். மேலும் விஜய் அரசியல் பேசுவாரா, என்ன குட்டி கதை சொல்ல போகிறார் என்றெல்லாம் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
விழா சொன்னபடி நடக்குமா?
தற்போது புதுவகை கொரோனா வைரஸ் சீனாவில் அதிகம் பரவி வருகிறது. இந்தியாவிலும் அது பரவ தொடங்கி இருக்கும் சூழலில் தற்போது கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பரிசீலனையில் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இப்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் வாரிசு பட விழா சொன்னபடி நடக்குமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
காதலுக்காக அடிவாங்கிய ராமராஜன்.. எங்க பிரிவுக்கு இது தான் காரணம்: நடிகை நளினி