தெறி, பைரவா காஸ்டியூம் டிசைனர் NJ சத்யா திருமணம் முடிந்தது! வைரல் போட்டோஸ்
நடிகர் விஜய்யின் தெறி, பைரவா படத்தில் அவருக்கு காஸ்டியூம் டிசைனராக இருந்தவரும், பிரபல நடிகருமான என்ஜே சத்யாவின் திருமணம் தற்போது நடந்து முடிந்திருக்கிறது.
NJ சத்யா
விஜய்யின் தீவிர ரசிகர் என தெறி, பைரவா படங்களில் பணியாற்றிய காலகட்டத்தில் NJ சத்யா தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். படத்தில் விஜய்க்கு அவர் வடிவமைத்து இருந்த உடைகளும் நல்ல வரவேற்பை பெற்றன. மேலும் சிவகார்த்திகேயனுடனும் அவர் சில படங்களில் பணியாற்றி இருக்கிறார்.
அதற்கு பிறகு அவர் தனியாக பேஷன் ஸ்டூடியோ தொடங்கி நடத்தி வருகிறார். பல முன்னணி பிரபலங்கள் அவர் வடிவமைத்த உடையில் போட்டோவுக்கு போஸ் கொடுத்து இருந்த ஸ்டில்கள் அடிக்கடி வைரல் ஆகின. அவரது ட்ரெண்டி உடைகளுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.
மேலும் கனா, வெற்றிவேல் போன்ற படங்களில் அவர் நடிக்கவும் செய்திருக்கிறார்.
கூட்டத்தில் பிக்பாக்கெட் அடித்த நடிகை போலீசாரால் கைது- ரசிகர்கள் ஷாக்
திருமணம்
NJ சத்யா தற்போது அவரது காதலி கோகிலா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். நடிகர் சசிக்குமார் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. கோயம்புத்தூர் கிணத்துக்கடவு பகுதியில் இருக்கும் அத்தீஸ்வரர் கோவிலில் திருமணம் நடைபெற்று இருக்கிறது.
திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் வரும் 20 மார்ச்-ல் நடைபெற இருக்கிறது.
தற்போது இணையத்தில் வைரல் ஆகும் NJ சத்யா - கோகிலா திருமண வரவேற்பு புகைப்படங்கள் இதோ.