ஒரே சீரியலில் நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள்.. யார்யாரெல்லாம் என்று பாருங்க
அஜித் - ஷாலினி, சூர்யா - ஜோதிகா, சினேகா - பிரசன்னா என வெள்ளித்திரையில் ஒன்றாக இணைந்து நடித்து காதலித்து திருமணம் செய்துகொண்ட நட்சத்திர ஜோடிகள் பலரும் உள்ளனர்.
அந்த வகையில், சின்னத்திரையிலும் சீரியல்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோடிகள் உள்ளனர். அப்படி, ஒன்றாக நடிக்கும்போது காதலித்து திருமணம் செய்துகொண்ட 5 ஜோடிகள் யார்யார் என்பதைத்தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.
ஆல்யா மானசா - சஞ்சீவ்
ராஜா ராணி சீரியலில் இணைந்து நடிக்கும்போது காதலித்து வந்த ஆல்யா மானசா - சஞ்சீவ், அதன்பின் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு ஒரு மகளும் ஒரு மகனும் உள்ளனர்.

ஷியாமந்தா கிரண் - ஆனந்த் செல்வன்
இவர்கள் இருவரும் ஆயுத எழுத்து சீரியலில் ஒன்றாக சேர்ந்து நடித்து வந்தனர். அங்கிருந்து இவர்களது காதல் பயணம் தொடங்கியது. பல வருடங்களாக காதலித்து வந்த இருவரும் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டனர்.

சித்து - ஸ்ரேயா
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'திருமணம்' சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வந்த சித்து - ஸ்ரேயா, காதலித்து திருமணம் செய்துகொண்டு ரியல் ஜோடியாக மாறினர். இவர்கள் இருவரும் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தம்பியாக இணைந்து போட்டியிட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த் சைஜு - சங்கீதா
அய்யனார் துணை சீரியல் ஹீரோவான அரவிந்த் சைஜு, ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் வெப் சீரிஸில் நடித்து வந்தபோது, அதே வெப் சீரிஸில் மலர் எனும் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சங்கீதாவை காதலித்துள்ளார். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். தற்போது குக் வித் கோமாளியில் ஜோடியாக பங்கேற்று வருகிறார்கள்.

மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா
சின்னத்திரையில் அனைவருக்கும் பரிச்சயமான ஜோடி செந்தில் - ஸ்ரீஜா. இவர்கள் இருவரும் சரவணன் மீனாட்சி சீரியலில் ஜோடியாக நடித்துள்ளனர். அங்கிருந்து இவர்களுடைய காதல் தொடங்கியது. பின் 2014-ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

பெர்லினில் மக்கள் கூட்டத்தின் மீது பாய்ந்த வாகனம்: சந்தேக நபரை சுட்டுக் கொன்ற பொலிஸார் News Lankasri
அமைதி பேச்சுவார்த்தைக்கு வழிவிட்ட டிரம்ப்: ஈரான் - அமெரிக்கா இடையே தற்காலிக தாக்குதல் நிறுத்தம் News Lankasri