செக் மோசடி செய்த நடிகர் விமலுக்கு அபராதம்! நீதிமன்றம் அதிரடி
விமல்
பசங்க, களவாணி, வாகை சூடவா, கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் விமல். சமீப காலமாக சினிமாவில் ஹிட் கொடுக்க முடியாமல் அவர் திணறி வருவது எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இருப்பினும் கடந்த வருடம் விமல் நடித்த விலங்கு வெப் சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. இதன் மூலமாக அவருக்கு மீண்டும் ஒரு வரவேற்பு கிடைத்து இருக்கிறது.
அடுத்து விமல் நடிப்பில் குலசாமி என்ற படம் வரும் ஏப்ரல் 21ம் தேதி ரிலீஸ் ஆகிறது.

நீதிமன்றம் அபராதம்
விமல் சொந்தமாக மன்னர் வகையறா என்ற படத்தை தயாரித்தபோது கோபி என்பவரிடம் இருந்து 4.5 கோடி ரூபாயை கடனாக வாங்கி இருக்கிறார். படத்தின் ரிலீசுக்கு பிறகும் அந்த பணத்தை திருப்பி கொடுக்காத நிலையில், காசோலையாக ஒருகட்டத்தில் கோபியிடம் கொடுத்திருக்கிறார் அவர்.
வங்கியில் பணம் இல்லை என செக் திரும்பி வந்துவிட்டதால் கோபி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கின் விசாரணையை தாமதப்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் செயல்பட்டதாக விமல் தரப்புக்கு நீதிமன்றம் 300 ரூபாய் அபராதம் விதித்து இருக்கிறது.
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan