இர்பான் கார் மோதி உயிர்ழந்த சம்பவம், ரூ. 30 லட்சம் அபராதம்..

By Karthick Raja Sep 20, 2026 09:29 AM GMT
Report

Court has ordered YouTuber Irfan to pay compensation: கடந்த 2023-ஆம் ஆண்டு யூடியூபர் இர்ஃபானின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்

நடிகர் திலகம் சிவாஜியின் மூத்த மகள் சாந்தி இன்று காலமானார்

யூடியூபர் இர்ஃபான்

Food Vlog மூலம் யூடியூப்பில் பிரபலமானவர் முகமது இர்ஃபான். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராகவும் பங்கேற்றுள்ளார். மேலும், நண்பன் ஒருவன் வந்த பிறகு என்கிற படத்திலும் நடித்துள்ளார்.

இர்பான் கார் மோதி உயிர்ழந்த சம்பவம், ரூ. 30 லட்சம் அபராதம்.. | Court Ordered Youtuber Irfan To Pay Compensation

கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ

கவரிங் நகை வாங்கி கொடுத்து அவமானப்பட்ட சோழன்.. அதிர்ச்சியில் நிலா!! அய்யனார் துணை சீரியல் ப்ரொமோ

பத்மாவதி

செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி அருகே கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி. இவர் தனது பணியை முடித்து வீட்டிற்கு செல்ல மரமலை நகரில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் போது பென்ஸ் கார் வேகமாக வந்து பத்மாவதியை மோதியது. இந்த விபத்தில் பத்மாவதி சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.

இர்பான் கார் மோதி உயிர்ழந்த சம்பவம், ரூ. 30 லட்சம் அபராதம்.. | Court Ordered Youtuber Irfan To Pay Compensation

பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

பாக்ஸ் ஆபிஸ் : 10 நாட்களில் உலகளவில் சர்தார் 2 திரைப்படம் செய்துள்ள வசூல்

காரை அதிவேகமாக ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய அசாருதீன் என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், விபத்து ஏற்படுத்திய சொகுசு காரை காவல் நிலையம் எடுத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அது யூடியூபர் இர்ஃபானின் கார் என்பது தெரிய வந்தது.

நீதிமன்றம்

இந்த நிலையில், தற்போது யூடியூபர் இர்ஃபான் விபத்தில் உயிரிழந்த பத்மாவதியின் குடும்பத்தினருக்கு ரூ.30.69 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என சிறு வழக்குகள் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இர்பான் கார் மோதி உயிர்ழந்த சம்பவம், ரூ. 30 லட்சம் அபராதம்.. | Court Ordered Youtuber Irfan To Pay Compensation

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US