நடிகர் ஜானி டெப் அவதூறு வழக்கு- நீதிமன்றம் அளித்த அதிரடி உத்தரவு, என்ன தெரியுமா?
பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைப்படத்தில் ஜேக் ஸ்பேரோ என்ற கதாபாத்திரம் மூலம் இந்திய மக்களிடம் பிரபலமடைந்தவர் ஜானி டெப்.
ஜானி டெப்-ஆம்பர் ஹேர்ட் வழக்கு
ஜானி டெப் அமெரிக்க நடிகை ஹேர்ட்டை கடந்த 2015ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
15 மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட பிரிந்தார்கள். 2018ம் ஆண்டு வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் ஆம்பர் ஹேர்ட் ஒரு கட்டுரை எழுதினார்.
அதில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் பற்றி எழுதிய அவர் கணவர் பெயரை எழுதாமல் அவர் தன்னை துன்புறுத்தினார் என்று எழுதியிருந்தார்.

இவரது பத்திரிக்கையால் ஜானிக்கு பட வாய்ப்புகள் குறைந்ததால் ஆம்பெர் ஹெர்ட் தன்னை அவதூறு செய்துவிட்டதால கடந்த 2018ம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு சில வருடங்களாக நடந்து வர இன்று இறுதிக்கட்ட தீர்ப்பு வந்துள்ளது.
அதில் தற்போது ஜானி டெப்புக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது. ஜானி டெப்புக்கு, ஆம்பர் ஹெர்ட் ரூபாய் 116 கோடி இழப்பீடு செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்பதிவிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்ததா?- வெளிவந்த விவரம்