முன்பதிவிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படம் இவ்வளவு வசூலித்ததா?- வெளிவந்த விவரம்
தமிழ் சினிமாவில் சில வருட கேப் பிறகு படம் நடித்துள்ளவர் நடிகர் கமல்ஹாசன். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள இப்படம் வரும் ஜுன் 3ம் தேதி உலகம் முழுவதும் படு மாஸாக வெளியாக இருக்கிறது.
படத்திற்கான புரொமோஷனை நடிகர் கமல்ஹாசன் ஓய்வே இல்லாமல் செய்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் படம் ரிலீஸ் ஆகிறது.
ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் என நடிப்புக்கு பெயர் போன நடிகர்கள் பலர் நடிக்கிறார்கள்.
படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ள ரெட் ஜெயின்ட் மூவிஸ் உரிமையாளர் உதயநிதி படம் சூப்பராக வந்திருப்பதாக சமீபத்தில் டுவிட் செய்துள்ளார்.

புக்கிங் வசூல்
படம் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் ரசிகர்கள் முன்பதிவு வேகமாக செய்து வருகிறார்கள். தற்போது படத்திற்காக நடந்த முன்பதிவில் இதுவரை ரூ. 8 கோடிக்கும் மேலாக வசூல் வந்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.
விமான விபத்தில் பரிதாபமாக இறந்த நடிகை சௌந்தர்யா தமிழில் இப்படியொரு சீரியல் நடிக்க இருந்தாரா?