இயக்குனர் அறிவழகனை தாக்கிய குக் வித் கோமாளி அஸ்வின்!
தமிழ்ராக்கர்ஸ்
அருண்விஜய், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் தமிழராக்கர்ஸ் என்ற வெப் சீரிஸ் ரிலீஸ் ஆகி இருந்தது. அதில் தமிழராக்கர்ஸ் என்ற பைரஸி இணையத்தளம் எப்படி உருவானது, அதை நடத்துபவர்கள் பின்னணி என்ன என்பது போன்ற விஷயங்களை காட்டி இருந்தார்கள்.
இந்த சீரிஸுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. மேலும் சினிமா துறையில் சில ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்கள், ஹீரோவின் அப்பா போன்றவர்கள் செய்யும் அட்ராசிட்டி பற்றி காட்டி இருப்பார்கள்.
மேலும் ஸ்லீப்பிங் ஸ்டார் என நடிகர் அஸ்வினை ட்ரோல் செய்யும் காட்சிகளும் சில இருந்தன.
பதிலடி கொடுத்த அஸ்வின்
குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் தனது படத்தின் பிரெஸ் மீட்டில் பேசும்போது தான் 40 இயக்குனர்களிடம் கதை கேட்டு தூங்கிவிட்டதாக கூறினார். அப்போது இருந்து அவரை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். அவரை கலாய்க்கும் விதமாக தமிழராக்கர்ஸ் சீரிஸில் இருந்த காட்சிகளும் இணையத்தில் வைரல் ஆனது.
இந்நிலையில் இது பற்றி இயக்குனர் அறிவழகனுக்கு அஸ்வின் இன்ஸ்டாக்ராமில் பதிலடி கொடுத்து இருக்கிறார். "தாஙகள் Brain Beauty (அறிவழகன்) கிடையாது, Brainless Beauty என்று நிரூபித்துவிட்டீர்கள்” என அஸ்வின் கூறியுள்ளார்.


நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள்: 300 அடி கீழ் நோக்கி பாய்ந்த விமானம்! திக் திக் நொடிகள்! News Lankasri
