குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் வெங்கடேஷ் பட் வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டப்பட்டாரா?
குக் வித் கோமாளி
மக்கள் இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்வதும், வீட்டிற்கு வருவதும் என பிஸியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். இதில் சிரிப்பையே மக்கள் மறந்துவிட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
அப்படி பிஸியாக வாழும் மக்களுக்கு ஒரு எண்டர்டெயின்மெண்ட் நிகழ்ச்சியாக அமைந்தது தான் குக் வித் கோமாளி. சமையலுக்கு சமையல், காமெடிக்கு காமெடி என நிகழ்ச்கி கலகலப்பாக இருக்கும்.
இதுவரை 3 சீசன்கள் முடிந்துவிட்டது, பிக்பாஸ் முடிந்து அடுத்த சீசன் எப்போதும் ஆரம்பமாகும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

வெங்கடேஷ் பட்
இந்த 3 சீசன்களிலும் மிகவும் கண்டிப்பான நடுவராகவும், அதேசமயம் கலகலப்பாகவும் இருப்பவர் வெங்கடேஷ் பட். இவர் தனது வாழ்க்கையில் ஒரு விஷயத்திற்காக பட்ட கஷ்டம் எதிரிக்கு கூட வரக் கூடாது என பேசியிருக்கிறார்.
அதாவது அவருக்கு திருமணம் ஆகி 7 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்தாராம். எங்கே சென்றாலும் குழந்தை பற்றி அனைவரும் கேட்பதால் நிகழ்ச்சிகளுக்கு செல்வது கூட நிறுத்திவிட்டாராம்.
வீட்டில் வந்தாலும் குழந்தை பிரச்சனையால் கணவன்-மனைவிக்குள் பிரச்சனை வந்திருக்கிறது. குழந்தை இல்லாத கஷ்டம் எதிரிக்கு கூட வரக்கூடாது என தனது கஷ்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது வெங்கடேஷ் பட்டிற்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் வைபவிற்கு 3 பசங்களா, இவர்கள் தானா?- இதுவரை பார்த்திராத புகைப்படம்